top of page
  • Writer's pictureNEETHIIN THEERPPU

நாளை முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி

'தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்படி' இந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், இந்த கால கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இதன் படி நாளை முதல் வங்கிகளில் மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்எனவும் . மேலும் இந்நிலையில் அனைத்து வங்கிகளின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வங்கிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு வங்கிகள் குடிநீர், நிழலில் காத்திருக்கும் வசதி போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும்.

வங்கிகளில் மாற்றப்படும் 2,000 நோட்டுகள் குறித்த அன்றாட தரவுகள் பராமரிக்கப்பட வேண்டும். இந்த விவரங்கள் எப்போது கேட்கப்பட்டாலும் அப்போது கொடுக்கப்பட வேண்டும்" என்றும் அறிவுறுத்தியுள்ளது.


ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் இது போன்று சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களிடம் அடையாள அட்டையின் நகல் கேட்கக்கூடாது என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







bottom of page