top of page
  • Writer's pictureNEETHIIN THEERPPU

பிராமணர்களால் தொடங்க போகும் கட்சியை நான் வழிநடத்த அவர்கள் விரும்பினால் நான் பாஜகவிலிருந்து விலகுவேன்



பிராமணர்களால் தொடங்க போகும் கட்சியை நான் வழிநடத்த வேண்டும் என அவர்கள் விரும்பினால் நான் பாஜகவிலிருந்து விலகுவேன்என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார் .


அதாவது தனியார் யு ட்யூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்துள்ளார் எஸ்.வி.சேகர். அதில் 2009 ஆம் ஆண்டு முதல் அதாவது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போதிலிருந்தே பாஜகவுக்காக பெரிய அளவில் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.

எனக்கு சுயமரியாதைதான் முக்கியம். என்னுடைய நேர்மை கூட தமிழக பாஜகவினருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் கிடையாது. இவர் பாஜகவுக்கு என்ன செய்திருக்கிறார். நான் போனில் அப்பாயிண்மென்ட் கேட்டு அன்றைய தினம் போன் செய்தால் கூட எடுக்காதவர் அண்ணாமலை. அவருக்கு பிராமணர்களை பிடிக்கவில்லை என்று கூட இருக்கலாமே. பிராமணர்கள் 3 சதவீதம் மட்டுமே இருந்தாலும் அவர்களை ஏன் கட்சியில் வளரவிடணும் என நினைக்கிறார் அண்ணாமலை.

பிராமணர்களால் தொடங்க போகும் கட்சியை நான் வழிநடத்த வேண்டும் என அவர்கள் விரும்பினால் நான் பாஜகவிலிருந்து விலகுவேன்என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார் .



bottom of page