top of page
  • Writer's pictureNEETHIIN THEERPPU

ஒமிக்ரானின் புதிய வகை வேரியண்ட் -பிஎப் 7 , ஒமிக்ரான் XBB.1.5கொரோனா-ஒரு பார்வை


ஒமிக்ரானின் புதிய வகை வேரியண்ட் ஆன பிஎப் 7 கொரோனா ஒருவரிடம் இருந்து 18 பேர் வரை பரவும் தன்மை கொண்டது. அதிவேக பரவலுக்கு இந்த கொரோனா வழிவகுக்கும் என்பதால் உலக நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் கொண்டு வரத்தொடங்கியுள்ளன .

நெகட்டிவ் சான்றிதழ் வழங்குவது கட்டாயம்:

இந்தியாவில் அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானவை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்றும் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் புதிய வகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்குவது கட்டாயம் என்று தெரிவித்தது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வந்த 4 பேருக்கு பிஎப் 7 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து நான்கு பேரின் கொரோனா மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு சோதனை செய்ததில் அவர்களுக்கு பிஎப் 7 வகை கொரோனா பாதித்து இருந்தது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மேற்கு வங்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

தொடர்கண்காணிப்பு: ஒமிக்ரானின் புதிய வேரியண்ட் ஆன பிஎப் 7 வகை கொரோனா பாதித்த நான்கு பேரின் உடல் நிலையும் சீராக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்தூறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய வகை கொரோனா பாதித்த 4 பேரில் மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேற்கு வங்க மாநிலத்தின் நடியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். எனினும் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

ஒமிக்ரானின் புதிய வேரியண்ட் ஆன பிஎப் 7 வகை கொரோனா பாதித்த நான்கு பேரின் உடல் நிலையும் சீராக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்தூறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய வகை கொரோனா பாதித்த 4 பேரில் மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேற்கு வங்க மாநிலத்தின் நடியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். எனினும் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

மரபணு பகுப்பாய்வு சோதனை

புதிய வகை தொற்று பாதித்த 4 பேருடன் தொடர்பில் இருந்த 33 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல் நிலையும் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும் கொல்கத்தா விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கொல்கத்தா விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனினும் அவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தியதில் அவர்களுக்கு பிஎப் 7 வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருந்தது.


இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்தத் திடீர் ஆய்வுக்கு மிக முக்கியமான காரணம் கொரோனா தொற்று தான்.

இதற்கிடையில் மத்திய அரசு சிறப்புப் பொருளாதாரப் பகுதியில் இருக்கும் அனைத்து ஐடி மற்றும் ஐடீஸ் நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற டிசம்பர் 31, 2023 வரையில் அனுமதி அளித்துள்ளது.

முழு நேர வொர்க் ப்ரம் ஹோம்:

வாரத்தில் 5 நாளும் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்ட ஐடி நிறுவனங்கள், டெக் சேவை நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது வாரத்தில் 2 அல்லது 3 நாள் வந்தால் மட்டும் போதும் என நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்கள் முழு நேர வொர்க் ப்ரம் ஹோம் சேவை அளிக்கத்தயாராகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் பிஎப் 7 வகை கொரோனா பாதிப்பு இல்லை

சென்னை உள்பட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. எனினும், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் பிஎப் 7 வகை கொரோனா பாதிப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரான் XBB.1.5

இதனிடையே அமெரிக்காவை அலறவிட்ட ஒமிக்ரான் XBB.1.5 இந்தியாவில் நுழைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இந்த புதிய வகை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு, மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிய இந்த XBB.1.5 வகை ஓமிக்ரான் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிலும் எங்கு இந்த வைரஸ் பாதிப்பு அடுத்த அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் BA.2 வேரியண்டில் இருந்து உருவானதுதான் இந்த XBB வேரியண்ட் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது ACE2 ரிசப்டார் போலவே உள்ளதால் இது வேகமாகப் பரவும் ஆற்றலையும் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இப்போது கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 40% இந்த XBB.1.5 வகை ஓமிக்ரானால் தான் ஏற்பட்டுள்ளது. இப்போது உலகம் எதிர்கொள்ளும் மிக மோசமான வேரியண்ட்டாக இந்த XBB உள்ளதாக மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் தெரிவித்துள்ளார். இந்த வேகமாகப் பரவும் ஆற்றல் தான் இதை ஆபத்தான ஒன்றாகமாற்றுகிறது.

கொரோனா வைரஸ் இந்த XBB வேரியண்ட்களை போலத் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது, ஒரு கட்டத்தில் அவை வேக்சின் தடுப்பாற்றலில் இருந்து தப்பிக்கவும் காரணமாக அமைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஆபத்தான XBB.1.5 வேரியண்ட் இந்தியாவில் நுழைந்துள்ளது ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மத்திய அரசு இப்போதே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. மேலும், நமது நாட்டில் இப்போது 90% பேருக்கு ஏற்கனவே இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல சுமார் 30% பேருக்கு பூஸ்டர் டோஸ் வேக்சினும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறை நமது நாட்டில் கொரோனா பாதிப்பு பெரியளவில் இருக்காது என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



15 views0 comments
bottom of page