top of page
  • Writer's pictureNEETHIIN THEERPPU

இந்தி மொழியைத் திணிக்கிற எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது.-ஜான் பிரிட்டாஸ்



டெல்லி: இந்தி மொழியைப் போல தமிழ், மலையாளம், கன்னடத்தில் பாடங்களைப் படித்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தினால் வட இந்திய மாணவர்கள் தென்மாநிலங்களுக்கு வரவே முடியாது என கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ் ராஜ்யசபாவில் சுட்டிக்காட்டினார். இந்தி மொழி திணிப்புக்கு எதிராக ராஜ்யசபாவில் பேசுகையில் ஜான் பிரிட்டாஸ் இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பாக ராஜ்யசபாவில் ஜான் பிரிட்டாஸ் எம்பி பேசியதாவது: நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இந்தியை திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் ஆட்சி மொழி தொடர்பான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவானது பரிந்துரைகள் வழங்கியது. அதில் இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய பல்கலைக் கழகங்களில் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயப்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ஐஐடியில் படித்த சுந்தர் பிச்சை, இந்தியில் தேர்வு எழுதியிருந்தால் அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்திருக்க முடியுமா? என எண்ணிப்பார்க்க வேண்டும். நாம் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? தென்னிந்தியாவில் வட இந்திய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இன்று படித்துக் கொண்டிருக்கின்றனர். வட இந்திய மாணவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம் அல்லது கன்னடத்தில்தான் பாடங்களைப் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அப்படி கட்டாயப்படுத்தினால் வட இந்திய மாணவர்கள் தென்னிந்தியாவுக்கு வர முடியாது..வட இந்தியாவுக்குதான் திரும்பி செல்ல வேண்டும். இந்தி மொழியைத் திணிக்கிற எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் கூறியிருந்தார்.







4 views0 comments
bottom of page