top of page
  • Writer's pictureNEETHIIN THEERPPU

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி ஆட்டையாம்பட்டி என்றால் அது அதிமுகவின் கோட்டை-எடப்பாடி பழனிசாமி.




அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே 22.9.0222 இரவு நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது திரண்டிருந்த கூட்டத்தில் , திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.


அப்போது எடப்பாடி பழனிசாமி, "இந்த மண் ஒரு ராசியான மண். சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி ஆட்டையாம்பட்டி என்றால் அது அதிமுகவின் கோட்டை. ஆட்டையாம்பாட்டி பேரூராட்சி பகுதியில் எந்தத் திசை நோக்கினாலும் கடல் போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. சிலர் சொல்கிறார்கள், தங்களுக்கு தொண்டர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்று. அவர்கள் எல்லாம் இங்கே ஆட்டையாம்பட்டியில் வந்து பாருங்கள்." என்றார்.

மேலும் அவர், "தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலும், சேலத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சேலத்திற்கு ஒரு அமைச்சர் போட்டிருக்கிறார்கள். அவர் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. இன்னும் 44 அமாவாசைகள் தான் திமுக ஆட்சிக்கு உள்ளன. 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் 44 அமாவாசைகள் கூட காத்திருக்க தேவையில்லை.


பொறாமை:-


நிறைய பேர் பொறாமைப்படுகிறார்கள். எத்தனை முறை உடைந்தாலும் இந்தக் கட்சியை எதுவும் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறார்கள். எந்தக் காலத்திலும் அதிமுகவை உடைக்க முடியாது. அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற கனவு கண்டால் கானல் நீராகத்தான் இருக்க முடியும். சில கறுப்பு ஆடுகள் திமுகவிற்கு துணை போகிறார்கள். அவர்களின் முயற்சி பலிக்காது. அவர்கள் யாரென்று வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறோம்.


லஞ்ச ஒழிப்புத்துறையினர் மிரட்டல்:-


தற்போது அதிமுக தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். மாவட்ட நிர்வாகிகள் மீது மட்டுமல்லாமல் அதிமுக நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்துகிறார்கள். திமுகவை போல அதிமுகவினர் கொள்ளையடித்து பணம் சேர்க்கவில்லை. சேலத்தில் இளங்கோவன் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவருக்கு நெருக்கமானவர் என பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் டெய்லராக உள்ள அவர் வீட்டிலும் சோதனை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறையினர் மிரட்டுகிறார்கள். என பேசினார்.





3 views0 comments
bottom of page